சிங்கப்பூரில் கொள்ளையடித்த 3 இந்தியர்களுக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

சிங்கப்பூரில் கொள்ளையடித்த 3 இந்தியர்களுக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கபட்டது.
சிங்கப்பூரில் கொள்ளையடித்த 3 இந்தியர்களுக்கு தலா 7 ஆண்டு ஜெயில்
Published on

சிங்கப்பூர்,

மலேசிய வாழ் இந்தியர்கள் விக்னேஷ்வரன் சேகரன் (30), சரவணக்குமார் கருணாநிதி (30), செல்வம் கருப்பையா (32).

இவர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்டனர். இச்சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது . இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் விக்னேஷ்வரன் சேகரன், சரவணக்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 12 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் செல்வம் கருப்பையாவுக்கு 5 ஆண்டு மற்றும் 9 மாதம் ஜெயில் தண்டனையும், 12 பிரம்படி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com