

ஷாங்காய்,
சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான விற்பனை கடந்த 10-ந் தேதியே பல்வேறு கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. இந்த விற்பனை தொடங்கிய முதல் 2 நிமிடங்களிலேயே 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. இது ஒரு மணி நேரத்தில் 10 பில்லியன் டாலராக (சுமார் ரூ.72 ஆயிரம் கோடி) உயர்ந்தது.