மெக்சிகோவில் திரவ எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி மோதி வெடித்ததில் 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் திரவ எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று மோதி வெடித்து சிதறியதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
மெக்சிகோவில் திரவ எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி மோதி வெடித்ததில் 14 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் மேற்கில் தெபிக்-குவாடலஜாரா நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், மற்றொரு வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் லாரி சாலையில் உருண்டோடி, வெடித்து சிதறியது. இதனால், 2 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுக்கு சேதம் ஏற்பட்டது. விபத்தினால் வேறு 3 வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com