

கார்ட்டூம்,
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட ஒரு பிரிவினருக்கு சொந்தமான கால்நடை பண்ணைக்குள் எதிர் தரப்பினர் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த மோதலில் ஏராளமான கால்நடைகளும் கொல்லப்பட்டன.