மதவழிபாட்டின்போது துப்பாக்கி சூடு - 15 பேர் பலி

மதவழிபாடு செய்ய கூடியிருந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
மதவழிபாட்டின்போது துப்பாக்கி சூடு - 15 பேர் பலி
Published on

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் ஷகீல் மாகாணம் எசஹ்னி என்ற பகுதியில் உள்ள கிறிஸ்தவ மதவழிபாட்டுதலத்தில் நேற்று மதவழிபாடு நடைபெற்றது. இதில் பலர் மதவழிபாடு செய்துகொண்டிருந்தபோது திடீரென வழிபாட்டு தலத்திற்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் மதவழிபாடு செய்துகொண்டிருந்த 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com