நைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் பலி - 70 பேர் காயம்

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் குறைந்தது 15 பேர் பலியாகினர்.
நைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் பலி - 70 பேர் காயம்
Published on

அபுஜா,

நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் குறைந்தது 15 பேர் பலியாகினர். மேலும் 70 பேர் பலவிதமான காயங்களுக்கு உள்ளானதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

விடுமுறையைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினரும், நண்பர்களும் அதிகமாக பயணித்ததால் முக்கிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந்தன. அதிக போக்குவரத்து நெரிசல், மோசமான சாலை நிலைமைகள் மற்றும் சில சமயங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணிகள் தான் கலவையான விபத்துகளுக்கு காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com