வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயம்

வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயமடைந்து உள்ளனர்.
வடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 150 பேர் காயம்
Published on

புகுஷிமா,

ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் கடந்த சனிக்கிழமை இரவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.3 ஆக பதிவானது. இதன்பின் நேற்று காலை பிரதமர் யோஷிஹிடே சுகா கூறும்பொழுது, புகுஷிமா, மியாகி மற்றும் பிற பகுதிகளில் பலர் காயமடைந்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது. எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என கூறினார்.

வரும் வாரங்களில் நிலநடுக்கம் ஏற்பட கூடிய ஆபத்துகள் உள்ளன என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை. ஆனால், புல்லட் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை உள்ளிட்ட வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ உள்பட பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புகுஷிமா மற்றும் மியாகி தவிர்த்து டோக்கியோ நகரை ஒட்டிய சிபா, கனகவா மற்றும் சைதமா ஆகிய பகுதிகளிலும் பலர் காயமடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com