ஈராக்கில் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஈராக் நாட்டில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஈராக்கில் ஆயுத கிடங்கில் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
Published on

பாக்தாத்,

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து வைத்து ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது.

இங்கு ஆர்.பி.ஜி. எனப்படும் ராக்கெட் எறிகுண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்கள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த நிலையில் ஆயுத கிடங்கில் இருந்த ஆயுதங்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. இதனால் அருகிலுள்ள வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளனர். இதனை மருத்துவ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. 32 பேர் காயமடைந்துள்ளனர். வெடிவிபத்து பற்றி பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com