இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
Published on

ஜகார்தா,

இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவிகிதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது.

இந்நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கனமழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com