வங்காளதேசம்: சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி

வங்காளதேசத்தில் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசம்: சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டத்தில் 40 பேருடன் சொகுசு பஸ் இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com