சிரியாவில் இரு பஸ்கள் மோதிக்கொண்டதில் 35 பேர் பலியான சோகம்

சம்பவ இடத்தில் நடந்த மீட்பு பணியில் சிரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் இரு பஸ்கள் மோதிக்கொண்டதில் 35 பேர் பலியான சோகம்
Published on

டமாஸ்கஸ்,

சிரியாவின் தலைநகரை கிழக்கு மாகாணமான டெய்ர் எல்-சோருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலைவன நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சில் பாதுகாப்பு படையினரும், மற்றொரு பஸ்சில் பொதுமக்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட இந்த திடீர் விபத்தில் சிக்கி 30 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் நடந்த மீட்புப் பணியில் சிரிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com