எகிப்து நாட்டில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல் 36 பேர் பலி 123 பேர் படுகாயம்

எகிப்து நாட்டில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 36 பேர் பலியாகினர்.
எகிப்து நாட்டில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கர மோதல் 36 பேர் பலி 123 பேர் படுகாயம்
Published on

கொய்ரோ,

எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா கெய்ரேவிற்கும் இடையே உள்ள கேர்ஷின் நிலையத்திற்கு அருகில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 36 பேர் பலியாகினர். 123 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் ரெயில்வே துறை மந்திரி தெரிவித்துள்ளார். எகிப்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரெயில் விபத்தில் 373 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com