சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

மீட்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்குமாறு சிலி மக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் வலியுறுத்தினார்.
சிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
Published on

கொரோனல்,

அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறி உள்ளது.

திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அங்கிருந்த 1,100 வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. இந்த தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சிலியின் பிரதமர் கேப்ரியல் போரிக் இது குறித்து கூறுகையில்,

வல்பரைஸோ மாகாணத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் சவாலை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்குமாறு சிலி மக்களை போரிக் வலியுறுத்தி உள்ளார்.

மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக உள்துறை மந்திரி கரோலினா தோஹா தெரிவித்துள்ளார்.

19 ஹெலிகாப்டர்கள், 450 மீட்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நான் இங்கு 32 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், இது போன்ற சம்பவம் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தனது வீட்டை இழந்த குடியிருப்பாளர்களில் ஒருவரான ரோலண்டோ பெர்னாண்டஸ் சோகத்துடன் கூறினார்.

எல் நினோ என அழைக்கப்படுகிற வானிலை மாற்றத்தின் காரணமாக கடும் வறட்சியும் அதனால் எப்போதையும் விட கூடுதல் வெப்பநிலையும் காட்டுத்தீக்கு காரணமாக இருக்கலாம் என சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஜனவரியில் கொலம்பியாவில் 17 ஆயிரம் ஹெக்டர் காடு தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com