பர்கினோ பாசோ: தங்கச்சுரங்கத்தில் வெடிவிபத்து - 59 பேர் பலி

பர்கினோ பாசோ நாட்டில் தங்கச்சுரங்கத்தில் நடைபெற்ற வெடிவிபத்தில் 59 பேர் உயிரிழந்தனர்.
பர்கினோ பாசோ: தங்கச்சுரங்கத்தில் வெடிவிபத்து - 59 பேர் பலி
Published on

ஒவ்கடங்கு,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. இந்நாட்டில் நூற்றுக்கணக்கான தங்கச்சுரங்கள் உள்ளன. ஆப்ரிக்காவில் அதிக தங்க உற்பத்தி செய்யும் நாடுகளில் பர்கினோ பசோ 5-வது இடத்தில் உள்ளது.

இதில், பல்வேறு சுரங்கங்களில் சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுத்து, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்லொரா என்ற இடத்தில் மிகப்பெரிய தங்கச்சுரங்கம் செயல்பட்டு வந்தது. அந்த தங்கச்சுரங்கத்தில் இன்று பணியாளர்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, தங்கச்சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்தது. இந்த கோர வெடிவிபத்தில் தங்கச்சுரங்கம் பெரும் பாதிப்படைந்தது.

இந்த வெடிவிபத்தில் தங்கச்சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களில் 59 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com