கானா நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலி

கானா நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
கானா நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலி
Published on

அக்ரா,

கானா நாட்டின் கிழக்கே எனியினம் என்ற பகுதியில் பயணிகளை ஏற்றி செல்லும் இரு பேருந்துகள் சரக்கு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த பேருந்துகள் குமச்சி நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. செல்லும் வழியில் சரக்கு லாரி ஒன்று பழுதடைந்து சாலையில் நின்று இருந்தது. அதனை சரிசெய்யும் பணி நடந்து வந்தது. அதற்கு உறுதுணையாக ஓட்டுனரும் உடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் முதல் பேருந்து சரக்கு லாரி மீது மோதி விடாமல் தள்ளி சென்றது. ஆனால், மற்றொரு பேருந்து லாரி மீது மோதியது. இதில் 4 பயணிகள் அந்த இடத்திலேயே பலியாகினர். 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி லாரி ஓட்டுனரும் மரணம் அடைந்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com