மெக்சிகோ: இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி

மெக்சிகோவில் இரவு விடுதியில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர். #MexicoCity
மெக்சிகோ: இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி
Published on

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் சலமன்கா பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் புகுந்தது.

பின்னர் திடீரென அங்கிருந்தவர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 7 பேர் படு காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தப்பிச்சென்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com