சவுதி அரேபியாவில் விமான படை தளம் மீது தாக்குதல்; 10 அமெரிக்கர்கள் காயம்

அமெரிக்க-ஈரான் மோதலில் இதுவரை 300 வீரர்கள் வரை காயமடைந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்பு படை தெரிவிக்கின்றது.
சவுதி அரேபியாவில் விமான படை தளம் மீது தாக்குதல்; 10 அமெரிக்கர்கள் காயம்
Published on

வாஷிங்டன்

ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் மோதலின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான படை தளம் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் எரிபொருள் நிரப்ப கூடிய பல விமானங்கள் தாக்கப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல்களை ஈரான் நாடு நடத்தியுள்ளது என ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

இதில், அமெரிக்காவை சேர்ந்த 10 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 8 பேருக்கு பலத்த காயமும், 2 பேருக்கு மிக பலத்த காயமும் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. அமெரிக்க-ஈரான் மோதலில் இதுவரை 300 வீரர்கள் வரை காயமடைந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்பு படை தெரிவிக்கின்றது. 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என்றும் அவர்கள் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் ஈரானோ, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறி வருகிறது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் முதலில் கூறினார். அப்போது, அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும்.

அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன் என அவர் கூறினார். பின்னர் இந்த தாக்குதல் நிறுத்தம் ஏப்ரல் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com