

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்தியா தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உள்பட பொதுமக்கள் 4 பேர் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது மனித உரிமை மீறலாகும். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. எனவே எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்திய படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.