காபூல் குருத்வாரா மீது ஐஎஸ் தாக்குதலில் 27 சீக்கியர்கள் பலி; இந்தியா கடும் கண்டனம்

காபூல் குருத்வார மீது ஐஎஸ் தாக்குதலில் 27 சீக்கியர்கள் பலியானார்கள். தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு; தாக்குதலுக்கு இந்தியா கண்டன் தெரித்துள்ளது.
காபூல் குருத்வாரா மீது ஐஎஸ் தாக்குதலில் 27 சீக்கியர்கள் பலி; இந்தியா கடும் கண்டனம்
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் ஷோர் பஜார் பகுதியில் உள்ள குருத்வாரா மீது இன்று காலை பயங்கர துப்பாக்கி ஏந்திய பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மத்திய காபூலில் அமைந்துள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக எஸைடிஇ புலனாய்வுக் குழு தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ். ஆதரிக்கும் பாகிஸ்தானின் 'ஐ.எஸ்.ஐ' இந்த கொடிய தாக்குதலை திட்டமிட்டதாக இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் நம்புகின்றன.

காபூல் சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்களுக்கு விரைவாக குணமடைய விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானின் இந்து மற்றும் சீக்கிய சமூகத்தின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

சிறுபான்மை சமூகத்தின் மத வழிபாட்டுத் தலங்கள் மீது இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்கள், குறிப்பாக கொரோனா தொற்றுநோய் தாக்குதலின் இந்த நேரத்தில், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கொடூரமான மனநிலையை பிரதிபலிக்கிறது.

துணிச்சலான ஆப்கானிய பாதுகாப்புப் படைகளின் அர்பணிப்பும் மற்றும் ஆப்கானிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் முன்மாதிரியான தைரியம் ஆகியவற்றை நாங்கள் பாராட்டுகிறோம். நாட்டிற்கு அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்திய மக்கள், அரசு மற்றும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படைகளுக்கு துணையாக நிற்போம் என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com