சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உள்பட 2 பேர் பலி

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உள்பட 2 பேர் பலி
Published on: 

சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் ஒருவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் இந்தியர் ஆவார். விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றுதெரிவித்துள்ளது.

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களைக் குறிவைத்து அண்மைக்காலமாகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இந்த மாதத்தில் மட்டும் சவுதி அரேபிய விமான நிலையங்கள் மீதான தாக்குதல்களில் மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com