

மெல்போர்ன்,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனித குலத்தையே முடக்கிப்போட்டுள்ளது. பல நாடுகளில் சர்வதேச விமான சேவை முடங்கி உள்ளது. இதனால், தாய்நாட்டை விட்டுச்சென்றவர்கள் ஏராளமானோர் பிற நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.
அந்த வகையில் 39 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்தார்.
செப்டம்பர் 18-ந் தேதி வரையில், 45 ஆயிரத்து 950 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா வர விரும்புகின்றனர். 5 ஆயிரம் பேர் இங்கிலாந்தில் தவிக்கின்றனர். பிற நாடுகளிலும் ஆஸ்திரேலியர்கள் சிக்கி உள்ளனர். ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப முன்னுரிமை அளிக்கிறோம். இருப்பினும் அவர்கள் நாடு திரும்புவதின் அவசியம் குறித்து நேரடியாக தொடர்பு கொண்டு கண்காணிக்கிறோம் என கூறினார்.