ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நாடு ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்
Published on

சிட்னி

பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கத்தை குறிவைத்து வெளிநாட்டு சக்திகளால் ஆஸ்திரேலியா இணைய தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:-

ஒரு 'அதிநவீன அரசு ஒன்று இணைய தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கிறது. இது பல மாதங்களாக நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அதி நவீன தாக்குதலை முன்னெடுக்க உலகில் விரல் எண்ணிக்கையிலான நாடுகளே உள்ளன .

இருப்பினும் இதுவரையான விசாரணையில் எந்த தனிப்பட்ட தரவுகளும் களவு போகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒரு அதிநவீன இணைய தாக்குதலால் குறிவைக்கப்படுகின்றன.அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், கல்வி, சுகாதாரம், அடிப்படை சேவைகள் வழங்குவோர் மற்றும் பிற உள்கட்டமைப்பை செயற்படுத்துவோர் என இந்த பட்டியல் நீள்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்பு கொண்டு பேசி உள்ளேன் என கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் மற்றும் மூன்று பெரிய அரசியல் கட்சிகள் மீது சைபர் தாக்குதலை சீனா முன்னெடுத்தது கண்டறியப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com