

அப்போது இருவரும், இரு தரப்பு உறவு, இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் இரு நட்பு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் இரு நாடுகளிலும் இருந்து வரும் கொரோனா பாதிப்பு நிலைமைகள் குறித்தும், அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதேபோல் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு செய்யப்பட்டு வரும் மனிதாபிமான உதவிகள், நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த இரு நாட்டு தலைவர்களும், குறிப்பாக மத்திய கிழக்கு பகுதியில் இருந்து வரும் நிலைமை குறித்தும், இந்த பகுதியில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவும் பேசினர்.