

கான்பெர்ரா,
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் தொடர்ந்து தனது அலுவலக பணிகளை, தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. உடனே பரிசோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று உறுதியாகியுள்ளது. அடுத்த வாரம் தொற்றில் இருந்து குணம் அடைவேன் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.