உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரசுடன் எவ்வாறு போராடுகிறது என்பதை கண்டறிந்த ஆய்வாளர்கள்

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரசுடன் எவ்வாறு போராடுகிறது என்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
படம் : ABC News: Loretta Florance
படம் : ABC News: Loretta Florance
Published on

சிட்னி

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.

மராட்டியம், கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 15 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மராட்டியத்தில் அதிகபட்சமாக 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 24 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்தாலும், 20 சதவீத நோயாளிகளுக்கு இது கடுமையானது அல்லது முக்கியமானதாகும். வைரஸ் இறப்பு விகிதம் சுமார் 3.4 சதவீதம் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) மதிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சியில் தற்போது மலேரியா மற்றும் எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு தரப்படும் மருந்துகள் கொரோனா நோயாளிகளின் உடலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை தனித்தனியாகவும், இரண்டையும் சேர்த்துக் கொடுத்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் பீட்டர் டோஹெர்டி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபெக்ஷன் அண்ட் இம்யூனிட்டி ஆராய்ச்சியாளர்கள், நாட்டின் முதல் கொரோனா வைரஸ் நோயாளிகளில் ஒருவரிடமிருந்து வரும் நோயெதிர்ப்பு மறுமொழிகளை வரைபடமாக்குவதன் மூலம் வைரஸைப் புரிந்துகொள்வதில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளதாக கூறினர்.

உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கொரோனா வைரசுடன் எவ்வாறு போராடுகிறது என்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, லொபினவிர் (lopinavir) மற்றும் ரிடோனவிர் (ritonavir-) இந்த இரண்டு மருத்துகளின் கூட்டுக் கலவை மருந்து அலுவியா, எச்.ஐ.விக்கு பயன்படுத்தப்படும் நிலையில், இதனை கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் முதல் கொரோனா வைரஸ் நோயாளிகளில் ஒருவரின் இரத்தத்தை ஆய்வகத் தலைவர் கேத்ரின் கெட்ஜியர்ஸ்காவின் குழு ஆய்வு செய்து நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு பதிலளித்தது என்பதைக் கண்டறிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com