வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு - பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ


பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
x
தினத்தந்தி 10 July 2024 6:02 AM GMT (Updated: 10 July 2024 6:55 AM GMT)

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

வியன்னா,

2 நாள் ரஷிய பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், வியன்னாவில் வந்தே மாதரம் பாடலை இசையமைத்து அந்நாட்டு கலைஞர்கள் மோடி முன்னிலையில் பாடிக்காட்டினர்.

இந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி 1983 -ம் ஆண்டில் ஆஸ்திரியா நாட்டிற்கு வந்த கடைசி இந்தியப் பிரதமர் ஆவார்.


Next Story