பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு - 4 பேர் பரிதாப பலி

பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு - 4 பேர் பரிதாப பலி
Published on

பாரிஸ்,

ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைத் தெடர், இத்தாலி - பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த சூழலில் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் இன்று குவிந்திருந்தனர்.

இந்நிலையில் ஆல்ப்ஸ் மலை தொடரில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார். ஆனால் இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக பனிச்சரிவு, சாமோனிக்ஸ்க்கு தென்மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 20 மைல்) தொலைவில் உள்ள ஹாட்-சவோயி பகுதியில் உள்ள கான்டமைன்ஸ்-மான்ட்ஜோய் என்ற இடத்தில் உள்ள அர்மான்செட் பனிப்பாறை ஒன்று உருண்டு விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூர் பிரான்ஸ்-ப்ளூ வானொலி நிலையம் பனிச்சரிவின் அளவை 1,000 மீட்டர் (3,280 அடி) நீளமும் 100 மீட்டர் (328 அடி) அகலமும் கொண்டது என்று தெரிவித்தது. தேடுதலுக்கு உதவ இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com