

மனாமா,
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் தொழுகைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தடுப்பூசி பெற்ற (இரண்டாவது டோசுக்கு 14 நாட்களுக்குப் பிறகு) மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு, மீட்பு சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே மசூதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பிறகு, கொரோனா தொற்று குறைந்த பிறகு, படிப்படியாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.