

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நிரந்தர உறுப்பினர்களுடன் 10 தற்காலிக உறுப்பினர்கள் என 15 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக உள்ளது. ஏப்ரல் மாதத்தின் தற்காலிக தலைமைத்துவத்தை பஹ்ரைன் ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி போர்ப் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும் ஹார்முஸ் நீரிணை திறக்கும் வகையில் பஹ்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.
இதற்கு மற்ற நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.