இங்கிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

வரம்பற்ற கட்டுப்பாடுகளால் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக  வலைத்தளங்கள் பயன்படுத்த தடை
Published on

லண்டன்,

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், குழந்தைகளின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமராகவும், சிறிய குழந்தைகளின் தந்தையாகவும் இது சரியான முடிவு .

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த தடையை அமல்படுத்துவது எளிதான காரியம் அல்ல என்றாலும், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது.16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைத்தளங்களை அணுகுவதற்கு முழுமையான தடை விதிக்கப்படும் இது நாட்டின் எதிர்காலத்திற்கான முக்கியமான மாற்றமாக இருக்கும்” என்றார்.

வயது சரிபார்ப்பு

சமூக வலைத்தளங்களின் பாதிப்பால் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிக்டாக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் குழந்தைகளின் மனநலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் வாட்ஸ்அப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகள் இந்த தடையில் இடம்பெறாது. எனினும், அந்நியர்கள் குழந்தைகளை நேரடியாக தொடர்புகொள்ளக்கூடிய ஆன்லைன் விளையாட்டு சேவைகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு தளங்களுக்கு வயது சரிபார்ப்பு முறையின் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

சமூக வலைத்தளங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியற்றவர்களாக மாற்றுவதோடு, இணையதளத் தொல்லை மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கின்றன என்றும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறினார். மேலும், ஸ்க்ரோல் செய்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லாததால், குழந்தைகளை நீண்ட நேரம் ஸ்கீரினை பார்த்து நேரத்தை செலவிடுவதால் படிப்பு, விளையாட்டு மற்றும் தூக்க நேரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பான சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்திற்குள் அமலுக்கு வரும் வகையில் தேவையான சட்ட அதிகாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com