ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை - தலிபான் அரசு நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தலிபான் அரசு தடைவிதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை - தலிபான் அரசு நடவடிக்கை
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்ய தடைவித்தது.

அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண்கள் உரிமை பறிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதுவும் ஒன்றாகிறது. ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

ஏற்கனவே ஆண்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். ஆண்கள் வீட்டு சுமையை ஏற்கமுடியாத நிலையில், பெண்கள் அதனை ஏற்க அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தற்போது அழகு நிலையத்திற்கு தடைவிதித்தால், நாம் என்ன செய்ய முடியும்'' என மேக்கப் கலைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

மேலும், ''ஆண்களுக்கு வேலை இருந்தால், நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வரமாட்டோம். நாங்கள் தற்போது என்ன செய்யும்?. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் சாக வேண்டும் என விரும்புகிறீர்களா?'' என்று தனது கவலையை வெளிப்படுத்தினார். காபூலில் வசித்து வரும் நபர் ஒருவர் ''தலிபான் அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது இஸ்லாம் மற்றும் நாடு ஆகியற்றை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com