

டாக்கா,
வங்காளதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் நாடு தழுவிய பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 108- பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் தொற்று பாதிப்பு பரவத் தொடங்கிய பிறகு, ஒருநாளில் ஏற்படும் 2-வது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, நாட்டில் பரவியிருப்பதால் டாக்காவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று வங்காளதேச அரசு தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.