வங்காளதேச தேர்தல் திட்டமிடப்பட்ட கேலிக்கூத்து: ஷேக் ஹசீனா சாடல்

அவாமி லீக் கட்சியை மீண்டும் சேர்த்து வெளிப்படையான, சுதந்திர மற்றும் உள்ளடக்கிய தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார்.
வங்காளதேச தேர்தல் திட்டமிடப்பட்ட கேலிக்கூத்து:  ஷேக் ஹசீனா சாடல்
Published on

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்தது. 2 மாத கால போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து, வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

Also Read
மேற்கு வங்காளம்: நிபா வைரசால் பாதிக்கப்பட்ட இளம், பெண் நர்சு மரணம்
வங்காளதேச தேர்தல் திட்டமிடப்பட்ட கேலிக்கூத்து:  ஷேக் ஹசீனா சாடல்

இதன்பின்னர், பிப்ரவரி 12-ல் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி, வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் பல புதிய கட்சிகள் போட்டியில் உள்ளன. முன்பு தடை செய்யப்பட்டு, அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்திருந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தற்போது வலுவான கட்சியாக வளர்ந்துள்ளது. மாணவர் அமைப்புகளும் தேர்தலில் களமிறங்கி உள்ளன. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. ஆனால், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்ற தேர்தல் திட்டமிடப்பட்ட கேலிக்கூத்து என ஷேக் ஹசீனா சாடியுள்ளார். அவர் கூறும்போது, யூனூசின் கொலைகார, பாசிச தேர்தலை புறக்கணித்ததற்காக தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் மக்கள் தலைவர் ஷேக் ஹசீனாவின் நன்றி.

இந்த கேலிக்கூத்து, வாக்கு சாவடிகளை கைப்பற்றுதல், துப்பாக்கி சூடு, வாக்குகளை விலைகொடுத்து வாங்குதல், பண பட்டுவாடா உள்ளிட்ட பல விசயங்கள் நேற்றே தொடங்கி விட்டன. இன்று காலை பல இடங்களில் வாக்காளர்களே இல்லை என்றார்.

காலை 11 மணிவரை 14.96 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. இது தேர்தல் புறக்கணிப்பை தெளிவாக காட்டுகிறது. ஆனால், டாக்காவில் அதிக வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது அதிக சந்தேகம் கிளப்புகிறது என கூறினார். இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, அவாமி லீக் கட்சியை மீண்டும் சேர்த்து வெளிப்படையான, சுதந்திர மற்றும் உள்ளடக்கிய தேர்தலை நடத்த வேண்டும் என ஹசீனா கூறினார். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடந்து வருகிறது. நாளை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com