ஐ.நா. பொதுச்சபை அடுத்த தலைவராக வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி கலீலூர் ரகுமான் தேர்வு

ரகசிய முறையில் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 190 வாக்குகள் பதிவாகி இருந்தன.
நடுவில் இருப்பவர்:  கலீலூர் ரகுமான்
நடுவில் இருப்பவர்: கலீலூர் ரகுமான்
Published on

ஐ.நா. பொதுச்சபை

ஐ.நா. பொதுச்சபைக்கான தலைவராக அன்னலேனா பேயர்போக் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் வருகிற செப்டம்பரில் நிறைவடைகிறது. இந்த சூழலில், அடுத்த தலைவருக்கான தேர்தலில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இந்த முறை, 5 பிராந்தியங்களில் ஒன்றான ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில், வங்காளதேச நாட்டை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரியான கலீலூர் ரகுமான் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சைப்ரஸ் நாட்டின் ஆண்ட்ரியாஸ் காகவுரிசை விட ஒரு சில வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்து உள்ளார்.

இதற்காக, ரகசிய முறையில் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 190 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில், ரகுமானுக்கு 99 வாக்குகளும் காகவுரிசுக்கு 91 வாக்குகளும் கிடைத்துள்ளன. தகுதியற்ற வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

இதன்படி, செப்டம்பர் 8-ந்தேதி தொடங்கி ஓராண்டுக்கு அவர் இந்த பதவியை வகிப்பார். வங்காளதேச வெளியுறவு துறை மந்திரியாக கடந்த பிப்ரவரியில் இருந்து பதவி வகித்து வரும் அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ரோகிங்கியா விவகாரத்தில் உயர் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனீவாவில், ஐ.நா. அமைப்பின் பெரிய பதவிகளில் பொறுப்பு வகித்த அனுபவம் உள்ளவர் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com