வங்காளதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு அதிகாரப்பூர்வ தடை

இனி அந்த கட்சி எந்த விதமான அரசியல் கூட்டங்களையோ, போராட்டங்களையோ நாட்டில் நடத்த முடியாது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டாக்கா,

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைக் கலைக்குமாறு முந்தைய முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஒப்புதல் அளிக்கும் சட்டத்தை வங்கதேச நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) நிறைவேற்றியது.

இதன்படி வங்காளதேச நாடாளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு (திருத்த) மசோதா 2026-ஐ நிறைவேற்றியது. இது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மீதான தடையை அதிகாரப்பூர்வ சட்டமாக மாற்றுகிறது. இதன் மூலம் அக்கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகள், சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் தேர்தல் பங்கேற்பு ஆகியவை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின்படி, அவாமி லீக் கட்சி இனி எந்த விதமான அரசியல் கூட்டங்களையோ அல்லது போராட்டங் களையோ நாட்டில் நடத்த முடியாது. அக்கட்சியின் அறிக் கைகள், செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முந்தைய யூனுஸ் அரசாங்கம் முதலில் அசல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியது. அந்தத் திருத்தப்பட்ட சட்டத்தின்படி, எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அரசாங்கம் அவர்களின் கட்சிகளை கலைக்கக்கூடும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com