வங்காளதேசம்; மாணவர் இயக்க தலைவர் கொலையில் தேடப்படும் நபர் துபாயில் பதுங்கல்

ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் மசூத் துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் துபாயிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்காளதேசம்; மாணவர் இயக்க தலைவர் கொலையில் தேடப்படும் நபர் துபாயில் பதுங்கல்
Published on

டாக்கா

வங்காளதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து போராட்டமும் வன்முறையும் வெடித்தன. இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்து இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.இதற்கிடையே, ஷெரீப் உஸ்மான் ஹாடியை கொன்றவர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக வங்காளதேச இடைக்கால அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் தேடப்படும் பைசல் கரீம் மசூத் துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் துபாயிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:ஷெரீப் உஸ்மான் ஹாடியை நான் கொல்லவில்லை. அவரது கொலையில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நானும், எனது குடும்பத்தினரும் ஒரு அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளோம். இதில் நாங்கள் சிக்க வைக்கப்படுகிறோம். இந்தப் பழிவாங்கலிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளவே நான் துபாய்க்கு வந்துள்ளேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com