பதற்றங்களுக்கு மத்தியில்.. எதிர்க்கட்சிகளுக்கு வங்காளதேச இடைக்கால அரசு எச்சரிக்கை


பதற்றங்களுக்கு மத்தியில்.. எதிர்க்கட்சிகளுக்கு வங்காளதேச இடைக்கால அரசு எச்சரிக்கை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 May 2025 9:42 PM IST (Updated: 25 May 2025 9:44 PM IST)
t-max-icont-min-icon

தங்கள் மீது அழுத்தம் கொடுத்தால் பொதுமக்களின் ஆதரவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் சுடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இந்த சூழலில், தற்போது பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று ராணுவ தளபதி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது. இதில் தேசியவாத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே முகமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அதை அவரது உதவியாளர் மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கு நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வங்காளதேச தேசியவாத கட்சிக்கு, இடைக்கால அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் ஆகியோர் நியாயமற்ற கோரிக்கைகள் மூலம் தங்கள் மீது அழுத்தம் கொடுத்தால் பொதுமக்களின் ஆதரவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைமை ஆலோசகர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அரசாங்கத்தின் சுயாட்சி, சீர்திருத்த முயற்சிகள், நீதித்துறை செயல்முறைகள், சுதந்திரமான மற்றும் அல்லது இயல்பான செயல்பாடுகளைத் தடுத்தால் அரசாங்கம் மக்களுடன் கலந்தாலோசித்து தேவையான முடிவுகளை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story