சவுதி அரேபியாவில் ஜூன் 21 அன்று ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படும்

சவுதி அரேபியா ஜூன் 21 அன்று நாடு முழுவதும் தனது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் ஜூன் 21 அன்று ஊரடங்கு உத்தரவுதளர்த்தப்படும்
Published on

ரியாத்

சவுதி அரேபியா ஜூன் 21 அன்று நாடு முழுவதும் தனது ஊரடங்கு உத்தரவை தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் புனித நகரமான மக்காவில் மாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் ஊரடங்கு உத்தரவு மாறுபட்டு இருந்தது, ஆனால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் 24 மணி நேரமாக ஊரடங்கு அமலில் இருந்தது.முன்னர் ரமலான் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது, அதற்கு முன்னர் பெரும்பாலான இடங்களில் 24 மணிநேரமும் ஊரடங்கு இருந்தது.

நாட்டிற்குள் பயணம் செய்வது, மசூதிகளில் பிரார்த்தனை செய்வது, அரசு மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் வேலைக்குச் செல்வதற்கான தடைகள் மே 31 அன்று நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com