ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோந்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்துப் பேசினார்.
ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா சந்திப்பு
Published on

டாக்கா,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இன்று சந்தித்துப் பேசினார். வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

வங்காளதேசம் 1971- ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. வங்காளதேசம் சுதந்திரமடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நத் கோவிந்த் 3 நாள் பயணமாக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com