பெல்ஜியத்தில் அதிவேக ரெயில் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கைது

பிரெஸ்சல்ஸ் மற்றும் பாரீஸ் இடையேயான அதிவேக ரெயில் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெல்ஜியத்தில் அதிவேக ரெயில் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கைது
Published on

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்டில் பிரெஸ்சல்ஸ் மற்றும் பாரீஸ் நகரங்களை இணைக்கும் அதிவேக ரெயில் ஒன்றின் மீது இயந்திர துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான்.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர். எனினும் பயணிகள் தீவிரவாதியை சூழ்ந்து கொண்டு அவனை பிடித்தனர். இதனால் தீவிரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரெயில் மீது நடந்த தாக்குதல் முயற்சியில் தொடர்புடைய 4 பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர் என்ற தகவலை அந்நாட்டின் அரசு வழக்கறிஞர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

பெல்ஜியம் போலீசார் இந்த வழக்கிற்காக பிரெஸ்சல்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிற பகுதிகளில் உள்ள 6 வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டுகளோ அல்லது ஆயுதங்களோ இந்த சோதனையில் கண்டறியப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் பற்றி நீதிபதி முடிவு செய்வார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com