பெல்ஜியம்: அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் பலி

தெற்கு பெல்ஜியத்தில் அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் பலியாகினர்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

பிரஸ்ஸல்ஸ்,

தெற்கு பெல்ஜியத்தில் நடந்த அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது கொண்டாட்டக்காரர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக, தெற்கு பெல்ஜியத்தில் பிரஸ்ஸல்சுக்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில் ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பு கொண்டாட்டத்திற்காக இன்று காலையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று கொண்டாட்டக்காரர்கள் மீது மோதியது.

கார் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். கொண்டாட்டக்காரர்கள் மீது மோதிய கார் ஓட்டுனர் தப்ப முயன்ற போது போலீசார் கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் இந்த விபத்தின் பின்னணியில் எந்த வித பயங்கரவாத நோக்கமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com