அமெரிக்க படைகள் வெளியேற்றத்துக்கு பின் ஆப்கானிஸ்தான் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் உள்நாட்டு போர் நடக்கிறது.
அமெரிக்க படைகள் வெளியேற்றத்துக்கு பின் ஆப்கானிஸ்தான் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு
Published on

இதில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன.கிட்டத்தட்ட 95 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், எஞ்சிய படை வீரர்கள் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் வெளியேறி விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தலீபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. அரசு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள தலீபான்கள் நாட்டின்

பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ் நிலை நீடிக்கிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது தலீபான்களின் தற்போதைய தாக்குதல் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்கான தங்களின் கூற்றுக்கு முரணானது என இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என அஷ்ரப் கனியிடம் ஜோ பைடன் உறுதி அளித்தார்.

இதுகுறித்து அஷ்ரப் கனி கூறுகையில், ஜனாதிபதி ஜோ பைடன் உடனான தொலைபேசி உரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் தொடர்ச்சியான உறவை பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தொடரும் என ஜனாதிபதி ஜோ பைடன் எனக்கு உறுதியளித்தார். அவர்கள் ஆப்கானிஸ்தானை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com