பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்த ஆண்டு சிறப்பாக ஆசியான் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டதற்காக பிலிப்பைன்சுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
பிரதமர் மோடி
Published on: 

மணிலா

ஆசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 23-வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று நடந்தது. பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டெஜ் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றார்.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி குவாட் அமைப்பின் தலைவர்களையும் இன்று சந்தித்து பேசினார். இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் ஒன்றாக குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தை

ஆசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் அதிபர் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின்போது, இந்த ஆண்டு சிறப்பாக ஆசியான் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டதற்காக பிலிப்பைன்சுக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இந்த சந்திப்பு பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இரு தலைவர்களும் தொழில் நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, விண்வெளி, ரெயில்வே வளர்ச்சி மற்றும் நிதிசார் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர் என தெரிவித்து உள்ளது.

X