கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

AI image
அமெரிக்காவின் இந்த மசோதாவிற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
வாஷிங்டன்,
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.
இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புவதாக அந்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான மசோதாவை குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.






