அர்ஜென்டினா: முதன்முறையாக பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி

அர்ஜென்டினாவில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அர்ஜென்டினா: முதன்முறையாக பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி
Published on

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜெண்டினா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் முதன்முறையாக பார்மோசா மாகாணத்தில் வசிக்கும் 47 வயது பெண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு இதனை அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளது. அந்த பெண்ணுக்கு உயர் ரத்த கொதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. கடந்த மே 11ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அந்த பெண்ணுக்கு அதில் இருந்து குணமடைந்து உள்ளார்.

அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் மியூகோர்மைக்கோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்து உள்ளது. இதேபோன்று, பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com