இங்கிலாந்தில் கொரோனாவுக்கு கருப்பு- ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால், கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையின மருத்துவ பணியாளர்களே 72 சதவீதம் உயிரிழந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு கருப்பு- ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழப்பு
Published on

லண்டன்

அதிகாரப்பூர்வ தகவல்படி இங்கிலாந்தில் மொத்த மருத்துவ பணியாளர்களில், 44 சதவீதம் பேர் கருப்பின மற்றும் ஆசிய சிறுபான்மையினர்களே உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.அதில், பலியானவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் ஆவார்கள். இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், இது குறித்து ஸ்கை நியூஸ் ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.

அதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது.இது மிகவும், கடினமான சூழல். ஆனால் இதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும்.இதற்கான உண்மையான காரணம் கண்டறியப்படும். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com