கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு: 15 பேர் படுகாயம்

கனடாவில் இந்திய உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். #CanadaBlast
கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு: 15 பேர் படுகாயம்
Published on

டோரோண்டா,

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்துள்ள இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டோரோண்டா ட்ராயுமா சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிபிசி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாம்பே பேல் என்னும் இந்திய உணவகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் உணவகத்தினுள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் குண்டு வெடிப்புக்குள்ளான இந்திய உணவகம் போலீசாரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com