காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி

காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
காபுலில் உள்ள அமைச்சக வளாகத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி
Published on

காபுல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைவர் காபுலில் உள்ள அரசு அமைச்சக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது கமல் ஆப்கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வளாகத்திற்குள் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்தார். ஆனால் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே காவலர்களால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது ஒரு குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்றார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் முயற்சிக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மாகாணமான குண்டூசில் உள்ள ஒரு வங்கி அருகே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com