காங்கோவில் படகுகள் மோதல்; 30 பேர் பலியான சோகம்

விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகி விட்டனர். உயிரிழந்த அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு விட்டன என கூறினார்.
காங்கோ
கோப்புப்படம்
Published on: 

கின்ஷாசா

காங்கோ நாட்டில் இரண்டு படகுகள் மோதி கொண்டதில் 30 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

காங்கோ நாட்டின் வடமேற்கே உபாங்கி நகரில் இருந்து படகு ஒன்று புறப்பட்டு கின்ஷாசா நகர் நோக்கி சென்றது. இதேபோன்று கின்ஷாசாவில் இருந்து லுகோலெலா நோக்கி மற்றொரு படகு சென்றது.

30 பேர் பலி

இந்த, இயந்திரம் பொருத்தப்பட்ட 2 மரப்படகுகளும் ஈகுவேடீர் மாகாணத்தின் காம்பே-லுகோலெலா பகுதியருகே சென்றபோது, திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இதில் படகில் இருந்தவர்கள் நீரில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி மாகாண உள்துறை மந்திரி கிரிஸ்பின் புடு கூறும்போது, விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகி விட்டனர். உயிரிழந்த அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு விட்டன என கூறினார்.

படகு விபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com