அமெரிக்காவில் படகுப் போட்டியின்போது விபத்து - 3 பேர் உயிரிழப்பு

படுகாயம் அடைந்த ஒரு மீனவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் படகுப் போட்டியின்போது விபத்து - 3 பேர் உயிரிழப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் கல்மேன் நகரில் உள்ள ஏரியில் உள்ளூர் அளவிலான மேஜர் லீக் படகுப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதில் இரு படகுகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு மீனவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com